கட்டுநாயக்கவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு
கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை (15) காலை 5.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் 19 பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தின் கைத்தொழிற்சாலைகளில் அலுவல்களை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டையினை ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.