சுகாதார வழிமுறைகளின்றி நடமாடும் யாசகர்கள்

 
வவுனியா நகர்ப் பகுதியில் யாசகர்கள் பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 
வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த தந்த யாசகர்கள், நகரில் யாசகம் கேட்கின்றனர். அத்துடன் வவுனியா நகரம், வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன்னால் இரவு வேளைகளில் உறங்குகின்றனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் யாசகர்கள் நடமாடுவதாலும், வர்த்தக நிலையங்களின் முன்னால் உறங்குவதாலும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிடும் என அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பில் உரிய இடங்கலுக்கு தெரியப்படுத்தியும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், யாசகர்கள் கடைகளின் முன்னால் தங்குவதால், தாம் தினமும் கடைகளின் முன்னால் கிருமி நீக்கம் செய்ய வேண்டியுள்ளது எனவும் வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!