வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையேற்று 18 நாட்களுக்குள் லால் செனவிரத்னவிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய தம்மிக்க பிரியந்த கடந்த மாதம் 20 ஆம் திகதி களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் வழங்கப்பட்டு சென்ற நிலையில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக லால் செனவிரத்ன கடமைகளை பொறுப் பேற்றிருந்தார்.

கடமையேற்று 18 நாட்களுக்குள் கொழும்பு தலைமைக் காரியாலயத்தினால் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்னவிற்கு கொழும்பு சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!