20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம்
20 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்த மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரகசிய நிலைபாடு தனது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு சென்று அதனை திறந்து பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.