ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பணியாளர்கள் இருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்கலைக்கழகத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மதிப்பீடு செய்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகளுடன் நெருங்கிப் பழகிய 27 பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பல்கலைக்கழகத்தின் ஏனைய அனைத்து ஊழியர்களும் தமக்குரிய கடமைப் பட்டியலின்படி கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழகம் விடுத்ததுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில மாணவர்களைத் தொடர்ந்தும் தங்கியிருக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதேநேரம் விடுதியில் தங்கியுள்ள மாணவா்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பலரை உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!