கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு சென்றவருக்கு தொற்று உறுதி
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் மாதம் 23ஆம் திகதி பங்கேற்ற சிலாபத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இவர் கடந்த மாதம் 23ஆம் திகதி கோட்டையில் உள்ள பஸ் டிப்போவுக்குப் பயணம் செய்தார் எனவும், மேலும் 30ஆம் திகதி நுவரெலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தார் எனவும் பொலிஸ் விசாணைகளின்போது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.