மினுவங்கொடை பொலிஸ் நிலையம் மூடப்பட்டது

மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் சுமார் 85 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மினுவங்கொடை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் உணவகமொன்றை பராமரித்துச் சென்ற நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரின் மகனின் மூலமாக கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அவருடைய மகன் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் உணவகம் ஒன்றை பராமரித்துச் செல்லும் நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தின் அனைத்து அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் நிலையத்தின் பணிகள் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!