உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு
நாட்டில் நிலவும் COVID -19 பெருநோய் தொற்று நிலவரத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இன்று (07) தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
ஆயினும், பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ- சேவைகளூடாகப் பெற்றுக்கொள்ளலாம். திணைக்கள வலைதளத்தில் www.ird.gov.lk மற்றும் 1944 இலக்கத்தை அழைத்து இந்த சேவை தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்