கொரோனாத் தொற்றுடன் தப்பியவர் கைது
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து நேற்றிரவு தப்பிச்சென்ற வயோதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டையில் கைது செய்யப்பட்ட அவர் மீண்டும் ராகம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான, அவர் போதைப்பொருள் வாங்கவே தப்பிச் சென்றிருந்தார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.