கம்பஹாவும் முடக்கம்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகரிப்பையடுத்து கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது