யாழில் சுகாதார நடைமுறைகளை மீறிய திருமண மண்டபத்திற்கு தடை!

யாழ். கரவெட்டிப் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்று சுகாதார நடைமுறைகளை மீறியதைத் தொடர்ந்து 14 நாட்கள் நிகழ்வுகளை நடாத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (01) மண்டபத்தில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது அங்கு கொரோனா தொற்றுச் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாததுடன், திருமண நிகழ்வை நடாத்துவதற்கு சுகாதாரத் துறையினரிடம் முன் அனுமதியும் பெறப்படவில்லை. 

இந்நிலையில் குறித்த மண்டபத்தில் 14 நாட்களுக்கு நிகழ்வுகள், விழாக்களை நடாத்த கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!