ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் மைத்திரி வாக்குமூலம்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அவர் அங்கு ஏழு மணி நேரம் வாக்குலம் வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.
அவரை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை குறித்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.