20 இற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் உயர்நீதிமன்றில் நிறைவடைந்துள்ளன.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனகே அளுவிகார, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்த்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட அமர்வு முன் இந்த மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் கடந்த 29ஆம் திகதி தொடக்கம் முன்வைக்கப்பட்டன.

20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் 39 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அடிப்படை முரண்பாடுகள் இருப்பதால் அதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதாது. அதனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!