யாழ்ப்பாணத்தில் மாநகர மேயர்கள்
அகில இலங்கை மாநகர மேயர்கள் மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
இலங்கை உள்ளூராட்சி சபை ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி கேமந்தி குணசேகர நெறிப்படுத்தலில், யாழ்ப்பாண மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாநாடு இடம்பெற்றது.
இதில் இலங்கையிலுள்ள 24 மாநகர சபைகளின் மேயர்களில் 18 மாநகர சபைகளின் மேயர்கள் கலந்துகொண்டனர். 6 மாநகர சபைகளின் மேயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
கொழும்பு, அக்கரைப்பற்று, நுவரெலியா, கல்முனை, பண்டாரவளை,ம் தெஹிவளை – கல்கிஸை ஆகிய மாநகர சபைகளின் மேயர்களே மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டுக்கு வருகை தந்த மாநகர மேயர்கள் வைத்தியசாலை வீதியில் இருந்து மங்கல வாத்தியத்துடன் யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டினால் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.