திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் ‘கொரோனா’

கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட கம்பஹா – திவுலப்பிட்டிய பெண்ணின் 16 வயது மகளுக்கும் இன்று மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, மகளின் தாய் பணிபுரிந்த மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேரும், திவுலப்பிட்டியவில் அவருடன் நெருக்கமாகப் பழகிய 150 பேரும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!