கொரோனாவின் தாக்கத்தையடுத்து சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன், தனியார் வகுப்புகளை நடத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் 9 ஆம் திகதி வழங்கப்படவிருந்தது.

எனினும், திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே , வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!