2011 உலகக் கிண்ண விசாரணை நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் – நாமல்
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) எந்தவொரு ஆரம்பகட்ட விசாரணையும் இன்றி கிரிக்கெட் வீரர்களை நேரடியாகப் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பது நாட்டிற்கு தேவையற்ற அவமானத்தை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதிப்போட்டி நிர்ணயிக்கப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.