இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் அபாயம்- தொற்று நோய் பிரிவு

உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததும் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டத்திட்டங்கள் தளர்த்தப்பட்டன. இதனால் குறித்த நாடுகளில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டது.

இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படக்கூடும்.

ஆகவே, மக்கள் சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டும் இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் நிச்சயமாக கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மீண்டும் உருவாகும் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!