சஜித் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் கல்வீச்சு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் கல்வீசிசப்பட்டது. இச் சம்பவத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரத்மலானையில் நேற்றிரவு (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ”தான் எந்த வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் எனவும், எவருக்கும் அச்சமடையப் போவதில்லை” – எனவும் தெரிவித்தார்.