பாடசாலை மீது முறிந்து வீழ்ந்த மரம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் சூரிய ராஜா தெரிவித்தார்.
 
 கடும் காற்று வீசியதால் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சரவணபவானந்த வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்து வகுப்பறை சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் உதவியுடன் முரிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.


எனினும் கடந்த 24 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தவித அனர்த்தங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!