பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனர் திலும் துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலும் துசித்த குமார மற்றும் சுதத் அஸ்மடல ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

அதனடிப்படையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனர் திலும் துசித்த குமார நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!