ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி மட்டக்களப்புக்கு விஜயம்
மட்டக்களப்பு மாநகரசபை, சீயோன் தேவாலயம் ஆகியவற்றுக்கு ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி விஜயம் இன்று (29) மேற்கொண்டு பார்வையிட்டார். மாநகரசபை திண்மக்கழிவு சமூக அபிவிருத்திக்கு உதவுவதாகக் கூறிய அவர் சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி முதலில் மட்டு மாநகர மேஜர் ரி. சரவணபவனுடனான சந்திப்பு இடம்பெற்றது இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்தி எவ்வாறு நடைபெறுகின்றது மற்றும் சவாலக இருக்கின்ற விடயங்கள், வளபற்றாக்குறை, தேவையான விடயங்கள் தொடர்பாக தூதுவர் கேட்டறிந்து கொண்டதுடன் எங்களுக்கு சவாலாக இருக்கின்ற விடயங்களான கழிவு அகற்றல் செயற்பாடு இதனை ஜப்பான் எங்களுடன் சேர்ந்து செயற்படுவது தொடர்பாகவும் மற்றும் தீயணைப்பு பிரிவை பலப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பின்னர் அவர் திண்ணமக்கழிவு அகற்றலுக்கான வாகன வசதி, தீயணைப்பு பிரிவுக்கான வசதிகள் மற்றும் ஜப்பானிய தூதரகத்தினூடாக சமூக அபிவிருத்தி திட்டத்துக்காக எங்களுடன் சேர்ந்து இயங்குவதாக தூதுவர் இனக்கம் தெரிவித்துள்ளார் என மட்டு மாநகரசபை மேஜர். ரி.சரவணபவன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்ற சீயோன் தேவாலயத்துக்கு சென்று அங்கு குண்டுதாக்குதலால் சேதமடைந்த கட்டடங்களையும் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டட நிர்மானத்தையும் பார்வையிட்டார் பின்னர் இந்த குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் குடும்பங்களை இழந்தவர்களுக்கும் அவருடைய ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்ததுடன் இவ்வாறான அனர்தங்கள் இனிமேல் உண்டாவதை தடுக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக சீயோன் தேவாலய பாஸ்டர் ரோசான் தெரிவித்தார்.