ஹர்த்தாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்

வடக்கு, கிழக்கு முழுவதும் இன்று ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக  போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்து பேரணியாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வரை சென்று பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.



எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  “போதும் போதும் உங்கள் தமிழ்த் தேசிய வியாபரம்”, “எம்மை வைத்து உழைத்தது உங்களுக்குப் போதாதா?”, “தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரிகளே எமது அடிப்படை உரிமைகளை முதலில் நிறைவேற்றுங்கள்”, “திலீபனை வைத்து தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரம்”, “கடையடைப்பு உங்கள் அரசியல் வியாபாரத்துக்கா?”, “திலீபனை வைத்து மீண்டும் சூடுபிடிக்கும் தமிழ்த் தேசிய வியாபாரம்”, “நாம் அன்றாடம் உழைப்பவர்கள்’ எமது பொருளியல் உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்” எனப் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!