திருகோணமலைக்கு கப்பலில் வந்தவர்களுக்கு பேருக்கு கொரோனா

இந்தியாவிலுருந்து திருகோணமலை துறைமுகத்துக்கு வந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வந்தது. கப்பலின் ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகளும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றி தீர்மானிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!