கோஹ்லிக்கு அபராதம்
ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து போட்டி நடுவர் குழு அறிவித்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசுவதற்கு குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதையடுத்து, இந்த அபராதம் ஆர்சிபி கப்டன் விராட் கோஹ்லிக்கு விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.