20ஆவது திருத்தத்துக்கு எதிராக 18 மனுக்கள்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக இன்று (25) மேலும் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 18 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலனை செய்வதற்காக 5 பேரைக் கொண்ட நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, சிசிர டி அப்ரூ ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 மனுக்கள் இம்மாதம் 29ஆம் திகதி பரிசீலனை செய்யப்படவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!