ரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானி
ரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானி என்ற பெருமையை விமானப்படை பைலட்டான சிவாங்கி சிங் பெற உள்ளார்.
பனாரஸ் இந்து பல்கலையில் படித்து பட்டம் பெற்ற சிவாங்கி சிங், 2017 ம் ஆண்டு ஹரியானாவில் அம்பாலா விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்
விமானப்படையில் போர்விமானங்களை இயக்க 10 பெண் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிவாங்கி சிங் ஏற்கனவே மிக் வகை போர் விமானத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் அவருக்கு தற்போது ரபேல் போர் விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இவர் மிக் 21 வகை விமானங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால் இவர் ரபேல் விமானங்களை எளிதாக கைாயாள முடியும் என்று நம்பப்படுகிறது. மிக் வகை விமானங்கள் மணிக்கு 340 கி.மீ., வேகத்தில் தரை இறங்கவும், தரையிலிருந்து மேல் செல்லவும் கூடிய விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.