டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்
அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். [59] இவர். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
அவுஸ்திரேலிய அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்களுடன் 3631 ஓட்டங்கள் அடித்துள்ளார். 164 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 சதம், 46 அரைசதங்களுடன் 6068 ஓட்டங்கள் அடித்துள்ளார்.