யாழில் விபத்து: காயமடைந்த தாயும் பிள்ளையும் வைத்தியசாலையில்

யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த தாயும் பிள்ளையும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

நாவலர் வீதி, கச்சேரி – நல்லூர் வீதி சந்தியால் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள், கச்சேரி – நல்லூர் வீதியில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர், கார் வீதியோரமாக உள்ள தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!