முப்படையினரின் உதவியுடனாவது வடக்கில் வன்முறைக் கும்பல்களுக்கு முடிவு

“முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றாவது வடக்கில் செயற்படும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”

– இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நேற்று காங்கேசன்துறையிலுள்ள தனது அலுவலகத்தில் சஞ்சீவ தர்மரட்ண கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனைகள், சட்ட விரோதச் செயற்பாடுகள், வன்முறை குழுக்களின் அடாவடிகள் அனைத்துக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியமானது.

இது தொடர்பான நடவடிக்கைகளுக்குத் தேவைப்பட்டால் முப்படைகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றோம்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!