கட்டாரில் இலங்கை தூதரக அதிகாரிக்கு கொரோனா தொற்று
கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையே இதற்கு காரணம் என கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் அவசர சேவைகளை பெற்றுக்கொள்ளவும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மின்னஞ்சல் முகவரியையும், தொலைப்பேசி இலக்கங்களையும் அறிவித்துள்ளது.
உடனடி கவனத்திற்கான மின்னஞ்சல் முகவரி – consular.doha@mfa.gov.lk
தூதரக சேவைகளுக்கு – 74703413
தொழிலாளர் மற்றும் நலன்புரி சேவைகளுக்கு – 70088771 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.