2100 ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்

2100 ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்ரி  மீற்றருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி வருவதால், 2,100-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 38 சென்ரி  மீற்றருக்கும் அதிகமான அளவு உயரும் என, நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

சுற்றுச்சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. அதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்நிலையில் அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகி வருவதால், கடல் மட்டம் 38 சென்ரி மீற்றருக்கும் அதிகமான அளவு உயர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருகிறது.

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை வைத்தே இதனை கணக்கிட்டுள்ளனர். இனி வரும் காலத்தில் பனிக்கட்டிகள் உருகுவதை பொறுத்தே, கடல் மட்டம் உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 2,100ம் ஆண்டுக்குள் கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகளால் மட்டும் 9 செ.மீ கடல் மட்டம் உயரும் என கணித்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!