ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் -தயாசிறி ஜயசேகர
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தயார் என, அக்கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
கேள்வி – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை புதிய, இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவருக்கு வழங்க யோசனை ஏதும் இல்லையா?
தயாசிறி – தலைமைத்துவத்திறக்காக சண்டை போடும் நேரம் இதுவல்ல. தற்போதைய நிலையில் கட்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதனை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது தொடர்பிலேயே நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.
கேள்வி – ´´கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க ஆலோசனை வந்தால், அதை ஏற்க தயாரா?´´
தயாசிறி – ´´ அவ்வாறு ஆலோசனை வந்தால் நிச்சயமாக ஏற்க தயார். ஆனாலும் இப்போது அதற்கான அவசரம் இல்லை என நினைக்கிறேன்.