20 இற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே இன்று பகல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்தில் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாமல் அமுல்படுத்தக்கூடாது என்கின்ற முடிவை அறிவிக்கும்படியே மனுதாரர் உயர்நீதிமன்றில் தனது மனு ஊடாகக் கோரியுள்ளார்.
20ஆவது திருத்தச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் இன்று நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே அரசமைப்பின் நியதியாகும்.