காரைதீவு தவிசாளருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்காக சட்டவிரோத கூட்டம் மற்றும் ஊர்வலத்தை நடாத்த காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்.ஜயலத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர்களுள் ஒருவரான திலீபனின் நினைவுதினத்தை நினைவுகூர தவிசாளர் ஜெயசிறில் நடவடிக்கை எடுத்துவருவதாக புலனாய்வுத் தகவல்கள் முறையிட்டிருப்பதால் அதனை தடுத்து நிறுத்த தடையுத்தரவு விதிக்குமாறுகோரி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இச்சட்டவிரோத கூட்டம் ஊர்வலம் போன்றவற்றால் பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனை தடைசெய்ய தடையுத்தரவை வழங்குமாறும் கேட்டிருந்தார். அதனையேற்ற சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின்படி குறித்த சட்டவிரோத கூட்டம் ஊர்வலம் என்பவற்றை நிறுத்துமாறு கட்டளையை பிறப்பித்துள்ளது.