சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சேவையாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 அலுவலகத்தின் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுதப்பட்டுள்ளனர். அவர்களில் தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!