கமலா ஹரிஸை விமர்சித்த ட்ரம்பின் மகன்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்பாக தீவிரப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  அமெரிக்கஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எரிக் ட்ரம்ப் பேசும்போது,

“நீங்கள் கமலாஹரிஸைப் பாருங்கள். அவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் சமூகத்திலிருந்து முற்றிலும் விலகி ஓடிவிட்டார். இதனை இங்குள்ள இந்திய சமூகத்தினர் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

கரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிவேட்பாளர் ஜோ பிடன், துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹ‌ரிஸ் இருவரும் பேசி வருவது அவர்களுக்கு எதிராகவே போய் முடியும், கமலா ஹ‌ரிஸ் ஒருக்காலும் துணை ஜனாதிபதியாகமுடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் முன்னரே விமர்சித்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!