கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு சுபீட்சமான வாழ்க்கை – இம்ரான் மஹ்ரூப்

கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு சுபீட்சமான முறையில் வாழ வேண்டும் என்பதே, இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். இதற்கான பயணத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கான பலப்படுத்தலே எதிர்வரும் பொதுத்தேர்தல் ஆகும் என திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிடும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.  

எம்.ஐ. சவாகிர் தலைமையில் மூதூர் நொக்ஸ் கிராம மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமையப்போகும் அரசில் சிறுபான்மையினராக உள்ள சமூகம் சார்பில் தெரிவுசெய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிக்க வேண்டும்.

கிராமம் கிராமமாக மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமே ஒழிய ஒருபோதும் பழிவாங்கும் எண்ணமோ புறக்கணிப்போ மக்களுக்கு நடக்கக்கூடாது. எதை எப்படி செய்யலாம் என்ற தூய தூரநோக்கு எண்ணத்துடன் அரசியலில் செயற்பட வேண்டும். இதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!