பலத்த பாதுகாப்புடன் கொழும்பில் பிள்ளையான்
பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார்.
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியால் தேவாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.