நந்திக் கடல் களப்பு ஆழப்படுத்தப்படும்
முல்லைத்தீவு – நந்திக் கடல் களப்பை ஆழப்படுத்துவதற்கு, முதற்கட்ட அங்கிகாரம் கிடைத்துள்ளதாக, மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வட்டுவாகல் பாலமும் அதனை அண்டிய பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கும் அங்கிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் நந்திக் கடலை ஆழப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் கூறினார்