வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும் – விமல் வீரவன்ச
நாட்டின் தொழில் துறைகளை மேம்படுத்த வேண்டுமெனில் நாட்டிலுள்ள வங்கிகளின் கொள்கைகளிலும், சேவை பெறுனர்களுடனான தொடர்பாடல் முறையிலும் பெரும் மாற்றமொன்று அவசியமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்துத் தெரிவிக்கையில்,
”நாட்டிலுள்ள தொழில் உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் எடுத்த தீர்மானங்களே காரணம். கொவிட் – 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நிலைகுழைந்து நிற்கும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பார்க்கையில் இலங்கையிலுள்ளவர்கள் அதிஷ்டசாலிகள் என்றே தோன்றுகிறது.
தொற்று நோயை கட்டுப்படுத்தக் கூடிய தலைமைத்துவம் ஒன்றின் கீழ் நாடு உள்ளமையே அதற்கு பிரதான காரணம். அதனால் நாட்டின் அரச பொறிமுறையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சகல துறைகளுக்கும் தாக்கம் செலுத்தும்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அமுல்படுத்தபட்ட வரிக்கொள்கைகள் காரணமாக நாட்டில் தொழில் துறைகள் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில் 2019 நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் அவை மீண்டும் தலையெடுக்க முயற்சிக்கும் போது கொரோ கொவிட் – 19 வைரஸ் பரவல் அதற்கு தடையாக அமைந்துவிட்டது” என்றார்.