மஞ்சள் கடத்திய சுங்க அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது
சுங்கத் திணைக்களத்தில் இருந்து ச33 ஆயிரம் கிலோ மஞ்சளை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றிய சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளுமென்டல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வாகன தரிப்பிடம் ஒன்றில் சுமார் 40 அடி நீளம் கொண்ட மூன்று கொள்கலன் பாரவூர்திகளில் மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 33 ஆயிரம் கிலோ மஞ்சளுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகளும், மூன்றாயிரம் கிலோ உளுந்துடன் 7 லொறிகளும் நேற்று பொலிஸாரால் கைற்றப்பட்டன
கடத்தலுடன் தொடர்புடைய 10 பேர் புளுமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்..மட்டக்குளியில் உள்ள வர்த்தகர் ஒருவரால் துபாயில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை மூல்ம் தெரியவருகிறது.