இணைத் தலைமைப் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் இராஜினாமா

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து  பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இராஜிநாமா செய்துள்ளார்.

 
“தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும்போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதற்கு நான் முடிவெடுத்தேன்  .

“தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய தேசிய ரீதியான பிரச்சினைகள் உருவாகும்போது தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்களையும், கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படுவதற்கான சூழல் இதன்மூலமாக ஏற்படுத்தப்படும் என்பதால்தான் இவ்வாறான முடிவை நான் எடுத்துள்ளேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!