பிரெஞ் ஓபன் டென்னிஸ் இருந்து ஒசாகா விலகல்

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியைச் சமீபத்தில் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா அடுத்து நடைபெறவுள்ள பிரெஞ் ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மே 24  ஆம் திகதி முதல் ஜூன் 7 – ஆம் திகதி வரை  நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்தத் தொடர் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பிரபல வீராங்கனை ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் விக்டோரியா அசரன்காவை வென்று  ஒசாகா பட்டம் வென்றார் . உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சமீபத்தில் முதலிடத்தைப் பிடித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!