முதலாவது கோப் குழு கூட்டம் அடுத்த வாரத்தில்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது முயற்சிகள் மீதான குழுவின் (COPE) முதலாவது கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் பொதுக் கணக்குகள் மீதான குழுவின் (COPA) முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு தினங்களிலேயும் கூட்டம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குழுக்களுக்கான தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் மனுக்கள் தொடர்பான குழு ஒன்று கூடவுள்ளதுடன் அன்றைய தினம் அதன் தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.