இலங்கையில் 25 நாட்களில் சுமார் 50,000 பேர் கைது
கடந்த மாதம் 6ஆம் திகதி முதல் 30 திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, 46,637 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருட்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோய்ன், கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த 10,968 பேரும், றைபிள்களை வைத்திருந்த 90 பேரும் இதற்குள் உள்ளடங்குகின்றனர்.
அதே போன்று, 367 கிலோகிராம் வெடிபொருட்கள், 23 டெட்டனேட்டனர்கள், 10 கைக்குண்டுகள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.