பத்திரிகை விநியோகித்தவர் மீது வாள்வெட்டுத்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை – அளவெட்டி வீதியில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இன்று அதிகாலை வேளை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பத்திரிகை விநியோகஸ்தரான   அளவெட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதிகாலை 4.30 மணியளவில் கந்தரோடை – அளவெட்டி வீதியில்.மருதமரத்தை அண்மித்த பகுதியில் காணப்படும் பாலத்தடியிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!