2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி நாளை ஆரம்பம்
இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020, கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக இம்முறை சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளது.
நாளை (18) தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.