நல்லூர் பிரதேச சபைக்குள் புகுந்து செயலாளர் மீது தாக்குதல்

நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், நல்லூர், அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் உள்ள கடை தொடர்பில் பிரதேச சபை செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது எனத் தெரிவித்து பிரதேச சபைக்குள் புகுந்து முரண்பட்டுள்ளார்.

  சந்தேகநபர் திடீரென பிரதேச சபைச் செயலாளரைக் கடுமையாகத்   தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டபோது, அவரை மடக்கிப் பிடித்துத் தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபரின் தாக்குதலுக்குள்ளான நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், இவ்வாறான சம்பவம் இனிமேல் இடம்பெறக் கூடாது எனவும், சந்தேகநபர் எவ்வாறான அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தாலும் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் நல்லார் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!