தீ விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு கோரும் இலங்கை
இலங்கை கடல் பரப்பில் தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பல் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் கப்பலின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்ட செலவீனங்களை ஈடு செய்வதற்காக உரிமை கோரிக்கை ஒன்றை எழுத்து மூலமாக சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார்.
340 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த உரிமை கோரிக்கை கப்பல் உரிமையாளர்களிடம் முன் வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிசாம் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.